கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அரசாணை விரைவில் வெளியீடு: செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அரசாணை விரைவில் வெளியீடு: செந்தில் பாலாஜி
X

கரூர் மாவட்ட  ஊராட்சி 8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கண்ணையாவுக்கு வெள்ளியணை கடைவீதியில் வாக்கு சேகரிக்கும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் அடுத்த வெள்ளியணை பகுதியில் திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பணிமனையினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கண்ணையணை ஆதரித்து வெள்ளியணை கடைவீதியில் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் கூட்டணி கட்சி *-நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஊராட்சிக்குள்பட்ட 8 வது வார்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை என பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் 8 வது வார்டு மாவட்ட ஊராட்சி பகுதிகளில் 10 கோடியே 71 லட்சம் மதிப்பில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் முடிந்த பின்னர் விரைவில் நிலுவையிலுள்ள பணிகள் நிறைவேற்றப்படும். ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடியும் வரை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கை இருக்காது. என்றார். கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் இறுதி செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!