கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
X

நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி உள்ள நெல் மூட்டைகள்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கட்டளை கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கும் நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாகவே, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து வாங்கும் நெல்லினை மூட்டை, மூட்டைகளாக வாங்காமல் அப்படியே தேக்கி வைத்து உள்ளனர்.

ஏற்கனவே அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட நெல்களையும் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால், ஏராளமான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் நெல்லை தற்போது அறுவடை செய்யாமல், அப்படியே பயிர்களிலேயே நெற்கதிர்கள் உள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டளை கிராமத்தினையொட்டிய, மாயனூர், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, வளையல்காரன்புதூர், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் அவர்களது நெல்லினை இன்னும் கொள்முதல் செய்யாத நிலையால் அறுவடை செய்ய முடியாமல் அவதியுறுகின்றனர்.

ஆகவே, தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கையில், ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கி அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்களை எல்லாம், மொத்த கொள்முதல் நிலையம் அல்லது மறு இடத்திற்கு மாற்றுவதோடு. இங்குள்ள விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்தும் கிருஷ்ணராயபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவகாம சுந்தரியிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கவனத்திற்கும் இப்பகுதி விவசாயிகள் எடுத்து சென்றுள்ளனர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil