கோமாளி, விநாயகர் வேடமிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
புலியூர் செட்டிநாடு அரசு உதவி பெறும் பள்ளியில் விநாயகர் மற்றும் கோமாளி வேடமணிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 1064 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 19 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், நவம்பர் 1 ம் தேதி முதல் ௧ முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள செட்டிநாடு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 586 நாட்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்களுடன் கோமாளி வேடங்கள், விநாயகர் வேடமிட்டு, ரோஜா பூக்கள் கொடுத்தும் பன்னீர் தெளித்தும், மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளித்தது.
தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் வழங்க உள்ளனர். மேலும் கதை, பாடல், நடனம், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
15 நாட்களுக்கு பிறகு அடுத்து புத்தக பயிற்சி வழங்கவும் உள்ளனர். இதற்கு உதவும் வகையிலும், உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் உதயநிதியின் பிறந்தநாளைட்டி கொளந்தாகவுண்டனூர் தேவி அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu