/* */

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கரூர் மாவட்டத்தில், 15 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில், இன்று மாலை பிரச்சாரம் நிறைவடைந்தது

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  பிரச்சாரம் நிறைவு
X

வெள்ளியணை பகுதியில், உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூரில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 ஊராட்சி உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு 9 ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான இடைத் தேர்தலில், திமுக சார்பில் கன்னையனும், அதிமுக சார்பில் முத்துகுமாரும் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தலுக்காக கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று மாலை நிறைவு பெற்றது. இன்று காலை. க.பரமத்தி பகுதியில் தனது பரப்புரையை தொடங்கிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெள்ளியணை பகுதியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கண்ணையனுக்கு வாக்கு கேட்டு தனது பரப்புரையை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், 5 மாத திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சி வார்டு பகுதியில் 10 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதன் மூலமே ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் கூறினார். இதேபோல, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், க.பரமத்தி பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Updated On: 7 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  6. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  7. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  8. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  10. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்