கரூரில் ஊரடங்கு தீவிரம்
கரூரில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய இ பதிவு இல்லாமல் வந்த நபர்களை திருப்பி அனுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது காய்கறிகள், மளிகை கடை உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஊரடங்கு காலத்தில் தேவையற்ற வகையில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் மூலம் வெளியில் சுற்றும் நபர்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இன்று கரூர் அருகில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி இ-பதிவு உள்ளவர்கள் மட்டுமே அனுமதித்தார். மற்றவர்களை திருப்பி அனுப்பினார்.
தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்துவதை காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேவையற்ற வகையில் இருசக்கர வாகனம் மூலம் சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu