அருங்காட்சியத்தில் ஆட்சியர் ஆய்வு

அருங்காட்சியத்தில் ஆட்சியர் ஆய்வு
X

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் 

கரூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று கரூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியம் இரண்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அருங்காட்சியக காப்பாளர் மணிமுத்து அருங்காட்சியத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள், நாணயங்கள் பனை ஓலை, முதுமக்கள் தாழி உள்ளிட்டவைகளை ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையில் கீழ் உள்ள அருங்காட்சியம் என இரண்டும் வேறு வேறு இடத்தில் உள்ளன. இவை இரண்டையும்மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதே போல கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பல பொருட்கள் கிடைத்துள்ளன. தேவைப்பட்டால் கரூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future education