கொரோனா பரவலை தடுக்க ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடல்

கொரோனா பரவலை தடுக்க ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடல்
X
கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 15ம் தேதி முதல் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 15 ம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்காது என கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர்கள் சங்கம்,, கரூர் நெசவு & பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

கொரனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தொழிற்சாலைகள் கட்டுப்பாடு களுடன் இயங்கலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்திலும் இந்த தொழிலாளர்கள் வேலை செய்ய வந்து செல்வதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் இயங்கும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை மூடி வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கரூர் கைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் , கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் கரூர் நெசவு & பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முழு ஊரடங்கில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வந்தன தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 15.05.2021 ம் தேதி முதல் 24.05.2021 ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ்கள் இயங்காது என்று கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர்கள் சங்கமும் , கரூர் நெசவு & பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க , மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைக்கு இணங்க ஒத்துழைப்பு நல்கியமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நன்றி தெரிவித்தார். மேலும் நோய் பரவுதலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்த்தும் , வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார் .

Tags

Next Story
crop opportunities ai agriculture