ராணி மெய்யம்மை பள்ளியில் குழந்தைகள் தின விழா

ராணி மெய்யம்மை பள்ளியில் குழந்தைகள் தின விழா
X

குழந்தைகள் தின விழாவில் பால சாகித்ய அகாடமி எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் பேசுகிறார்.

குழந்தைகள் தின விழாவில் பால சாகித்ய அகாடமி எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் கலந்து கொண்டார்.

இந்தியாவின் முதல் பாரத பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக்குழு இணைந்து குழந்தைகள் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் தலைமை வகித்தார். பால சாகித்ய அகாடமி எழுத்தாளர் ஆயிசா நடராஜன் பேசுகையில், மாணவ, மாணவிகள் பள்ளியிலிருந்து வரும் பொழுது தங்களது அறிவியல் நுட்பங்களை கண்டறிந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

தனக்குள்ளே அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான தயார்படுத்துதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை செயல்படுத்த பள்ளியில் நடத்தப்படும் அறிவியல் மாநாடுகள், அறிவியல் கண்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் ஏதோ ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை செய்ய வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவது, அவர்களை கண்டுப்பிடிப்பது பள்ளியில் ஆசிரியர்கள் தான் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். அதில் ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். அதிக அளவில் அறிவியல் விஞ்ஞானிகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வேண்டும். மாணவ-மாணவிகள் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், அறிவியலுக்கு ஒத்துப் போகாத விஷயங்களை விட்டு விலக வேண்டும். அறிவியலோடு மாணவர்கள் பயணிக்க வேண்டும், அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியில் கட்டுரை, ஓவிய, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு