கரூரில் மணல் குவாரி அமைக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு

கரூரில் மணல் குவாரி அமைக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு
X
கரூரில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 150 வருடங்கள் அள்ள வேண்டிய ஆற்று மணலை சுமார் 30 அடி ஆழத்தில் கடந்த 26 ஆண்டு காலமாக அள்ளப்பட்டு விட்டதால்

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மணல் அள்ளுவதில் உள்ள முறைகேடு காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டது.

இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு ஆய்வு குழுவை அனுப்பி கரூர் மாவட்டத்தில் புகழூரில் தொடங்கி கும்பகோணம் சாமிமலை வரை உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த்து.

இந்த அறிக்கை, தமிழகத்தை அதிர வைத்தது மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் எந்த மணல் குவாரியும் இயங்கக் கூடாது என அப்போது தடை விதித்தது.அதன் பிறகு கரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த புதிய மணல் குவாரிகளுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம் கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது இந்த அனுமதியை ரத்து செய்து கரூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இயங்க அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!