கிருஷ்ணராயபுரம் அருகே தேள் கடித்து சிறுவன் பலி

கிருஷ்ணராயபுரம் அருகே தேள் கடித்து சிறுவன் பலி
X

பைல் படம்.

கரூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தேள் கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழையஜெயங்கொண்டம் பகுதியினை அடுத்த லட்சுமணம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகன் பாலமுருகன் வயது 7. கருப்புசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். புஷ்பவள்ளி தனது மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தார். சம்பவதன்று பாலமுருகன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தேள் கடித்துள்ளது. இதை தொடர்ந்து பாலமுருகனை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!