புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: எம்பி ஜோதிமணி கோரிக்கை

கரூர் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் எம்பி ஜோதிமணி கோரிக்கை விடுத்தார்.
கரூர் மக்களவை தொகுதியில் உள்ள புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க எம்பி ஜோதிமணி தமிழக வேளாண்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,
கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கவும், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கவும் வலியுறுத்தினார். இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், கரூர் தொகுதிக்கு உட்பட்ட கரூர் மற்றும் வேடசந்தூர் பகுதிகளை முருங்கை மண்டலமாக அறிவித்தது, உழவர் சந்தைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu