ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 40 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 40 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்
X

மாதிரி படம் 

கரூர் அருகில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.40 லட்சத்து 71ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாலைப்புதூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரம் ஒரு முறை வேளாண் பொருட்களுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கொடுமுடி மற்றும் கரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

ஏலத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு ஏல முறையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் 89.48 குவிண்டால் எடை கொண்ட 26 ஆயிரத்து 660 தேங்காய்கள் வரத்தானது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.59ம், குறைந்த விலையாக ரூ. 21.45ம், சராசரி விலையாக ரூ.24.25ம் என்று ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 617 க்கு விற்பனையானது.

அதேபோல் 218. 79 குவிண்டால் எடைகொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தானது. இதில் முதல் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.104.60ம், குறைந்த விலையாக ரூ. 101.99ம், சராசரி விலையாக ரூ.103.80ம், இரண்டாம் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.101.30ம், குறைந்த விலையாக ரூ. 81.60ம், சராசரி விலையாக ரூ.95. 79ம் என்று ரூ.21 லட்சத்து 72 ஆயிரத்து 153 க்கு விற்பனையானது.

அதேபோல் 180குவிண்டால் எடை கொண்ட 300 மூட்டை எள் வரத்தானது. இதில் சிவப்பு ரகம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ. 99.99ம், குறைந்த விலையாக ரூ. 70.09ம், சராசரி விலையாகரூ. 92.99ம், கருப்பு ரகம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.93.88ம், குறைந்த விலையாக ரூ.75.39ம் சராசரி விலையாக ரூ.92.98ம் என்று ரூ.15 லட்சத்து 38 ஆயிரத்து 283 க்கு விற்பனையானது. ஒட்டுமொத்தமாக இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.40 லட்சத்து 71ஆயிரத்துக்கு விற்பனையானது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....