/* */

கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்: முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைப்பு

கரூர் மாவட்டத்தில் 5,715 பேர் முறைசார கல்வி இயக்கம் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் கல்வி கற்கின்றனர்.

HIGHLIGHTS

கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்: முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைப்பு
X

கரூரில் வயது வந்தோர் மற்றும் முறைசார கல்வி இயக்கத்தின் மூலம் கல்வி கற்காத கற்போருக்கான மதிப்பீட்டு முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



இயக்கத்தின் சார்பில் கல்வி கற்காத கற்போருக்கான மதிப்பீட்டு முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆண்டு கல்வி பயிலாத ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் கணக்கெடுக்கப்பட்டு அதன்படி வயது வந்தோர் மற்றும் முறைசார கல்வி இயக்கத்தால் நடத்தப்படும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சார்பில் கல்வி கற்காத கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று முதல் 31ந் தேதி வரை 3 நாள்கள் க.பரமத்தி ஒன்றியத்தில் 18 நடுநிலைப்பள்ளிகள், 11 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 29 மையங்களில் சுமார் 580பேருக்கு தன்னார்வலர்கள் 29பேரால் நடத்தப்பட உள்ளது.

இதன்படி, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தினுடைய கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் வரவேற்றார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், வட்டார கல்வி அலுவலர் முருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பிறகு அவர் பேசுகையில், இந்த முகாமானது மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 286 மையங்களில் சுமார் 5 ஆயிரத்து 715பேர் பயன்பெறுவார்கள். இதில் கற்போரின் வசதிகேற்ப அந்தந்த மையங்களில் அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் வீடுகளுக்கும் சென்று நடத்தப்படுகிறது. கற்போர்கள் தவிர மற்ற ஆர்வமுள்ள கற்போர்க்கும் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். முகாமில் ஆசிரியர் பயிற்றுனர் செல்வி, ஆசிரியர்கள் ஆறுமுகம், சாந்தி, ரெஜினா, பத்மாவதி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். நிறைவில் தன்னார்வலர் சரிதா நன்றி கூறினார்.

Updated On: 29 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு