கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.62 ஆயிரம் பறிமுதல்

கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.62 ஆயிரம் பறிமுதல்
X

கரூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கரூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் தொழில்பேட்டையில் தமிழ்நாடு வாணிப கழக கிட்டங்கி வளாகத்தில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மேலாளராக ரவிச்சந்திரன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சூப்பர்வைசர் அங்கு பணிபுரிபவர்கள் அலுவலத்திற்கு வெளியேற விடாமல் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத 62,000 ரூபாய் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றினர். தொடர்ந்து இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!