ஏர் பிஸ்டலுக்கு ஆசை; ஏமாந்த 30 ஆயிரம்

ஏர் பிஸ்டலுக்கு ஆசை;  ஏமாந்த 30 ஆயிரம்
X
கரூரில் நபர் ஒருவர் ஏர்பிஸ்டல் வாங்க விரும்பி ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளார்.

கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் சென்னையில் டாடா மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஆன்லைன் மூலம் ஏர்பிஸ்டல் வாங்க விரும்பு, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் ஏர்கன் வாங்குவதற்காக ரூ.30 ஆயிரம் கூகுள்பே மூலம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து ஆர்டர் செய்த ஏர்பிஸ்டல் கிடைக்காத காரணத்தால் ஆர்டர் செய்த ஹரியானாவை சேர்ந்த நிறுவனத்தை சுரேஷ்குமார் தொடர்கொண்டார். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை.

இந்நிலையில், தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்திடம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என சுரேஷ்குமார் உணர்ந்துள்ளார். பின்னர் சுரேஷ்குமார் கரூரில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future education