ஒரே இரவில் இருவேறு இடங்களில், 11 லட்சம் பறிமுதல் செய்தது பறக்கும்படை

கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் பறிமுதல் .

கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கே.சூர்யா தலைமையில் தரகம்பட்டி சாலையில் குஜிலியம்பாறை பிரிவு என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கருங்குளத்தை சேர்ந்த கோமல் சாலமோன் ராஜா மற்றும் 2 நபர்கள் காரில் வந்தனர். அந்த காரை சோதனையிட்டபோது அதில் ரூபாய் 7,61,000 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மேற்படி தொகை பறிமுதல் செய்யப்பட்டு, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது

இதேபோல, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பள்ளபாளையம் பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது அதில், 3,65,500 உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் . உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் ஒரே இரவில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!