அடுப்பு மூட்டி ஆர்பாட்டம்: தேமுதிக நூதன போராட்டம்

அடுப்பு மூட்டி ஆர்பாட்டம்: தேமுதிக நூதன போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடத்தும் தேமுதிகவினர்.

கரூரில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பை வைத்து தேமுதிகவினர் கரூரில் நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விறகு அடுப்புகளை பற்ற வைத்தும், எரிவாயு சிலிண்டர்களை கையில் ஏந்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கரூர் மாவட்ட பொறுப்பாளர் கஸ்தூரி N. தங்கராஜ் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!