அங்கன்வாடி பணியாளர்கள் 4 ம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் 4 ம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்
X

கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பணி நிரந்தரம் உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து 4 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் காத்திருப்பு போராட்டத்தை கடந்த 22 ம் தேதி தொடங்கி இரவு பகலாக நடத்தி வருகின்றனர்.

இதன்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இரவில் நிலவிய கடும் பனியிலும் அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்து உறங்கி வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story