காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு கண்டு கொள்ளாத நகராட்சி...
கரூர் நகரில் அரசு விதிமுறை புறந்தள்ளி பேருந்து நிலையத்தை சுற்றிலும் அதிக அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்து ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கரூரில் உள்ள 4 தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள செந்தில்பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக வெற்றியையும், செந்தில்பாலாஜி வெற்றியை கொண்டாடும் வகையில் கரூர் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பிளக்கஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டான பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு உள்ளது அதையும் மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிளக்ஸ் பேனர்கள் வைக்க நகராட்சியிடம் அனுமதி பெற்று மட்டுமே வைக்க வேண்டும். அந்த அனுமதி எண் பிளக்ஸ் பேனரில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே சென்னையில் பிளக்ஸ் பேனர் காற்றில் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, நீதிமன்ற பிளக்ஸ் பேனர்கள் வைக்க கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, கரூரில் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் சரிந்து விழுந்து அசம்பாதவிதம் ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu