தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்

தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்
X

கரூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனக்கு அரசாங்கம் வழங்கிய பொங்கல் பரிசான ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பொருட்களை தூய்மை பணியாளருக்கு வழங்கி அவரை கவுரவித்தார்.

கரூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் பொங்கல்பரிசு பொருட்கள் வழங்குவது இன்று தொடங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நியாயவிலை கடைகளில் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி தமிழகஅரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டன.இதில் கரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளார்.கரூர் அருகில் உள்ள காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி முருகையன். இவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் மற்றும் பணத்தை தனது ஊராட்சியில் பணியாற்றும் கொரோனா முன்கள பணியாளரான லட்சுமி என்ற தூய்மைப் பணியாளருக்கு வழங்கி அவரை கௌரவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!