ரயில் மோதி உயிரிழந்த பள்ளி மாணவி
Karur News,Karur News Today-பள்ளி மாணவி கனிமொழி, ரயில் மோதி உயிரிழந்தார். (கோப்பு படம்)
Karur News,Karur News Today - கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி. இவர் திருச்சி மாவட்டம், அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து பள்ளிப்படிப்பை தொடர்ந்து வந்தார். கனிமொழி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறைக்காக தனது கிராமத்திற்கு கனிமொழி சென்றுள்ளார். கனிமொழி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக, ரயில்வே பாதையில் சென்றதாக தெரிகிறது. வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரது வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் கனிமொழியை தேடியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அருகில் உள்ள ரயில்வே பாதையில் அவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு கனிமொழியின் குடும்பத்தினருக்கு பலத்த அதிர்ச்சியடைந்தனர்.
பள்ளி மாணவி கனிமொழி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது அதிகாலையில் சென்னையில் இருந்து, மங்களூரு சென்ற விரைவு ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில், அந்த இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வந்த திருச்சி ரயில்வே போலீசார், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மாணவி கனிமொழியின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சொந்த ஊருக்கு சென்ற பள்ளி மாணவி, இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu