கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Karur News,Karur News Today- கரூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

Karur News,Karur News Today- திருமணமான இரண்டே வாரங்களில், பெண் தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் கணவரை கைது செய்த கரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமணமான 2 வாரங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை; கணவன் கைது

Karur News,Karur News Today- கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகப்பிரியா (வயது 27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில், சுதர்சன் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளது ராகப்பிரியாவிற்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வீட்டில் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் போலீஸ் டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தாந்தோணிமலை போலீசார் அங்கு வந்தனர். பின்னர் ராகப்பிரியாவின் உடலை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன் சுதர்சனை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், ராகப்பிரியாவிற்கு திருமணமாகி 2 வாரங்களே ஆனதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணி (58). கூலித்தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், குளித்தலை பொய்யாமொழியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மண்மங்கலம் அருகே உள்ள கடம்பன்குறிச்சியில் மணல் அள்ளும் வேலைக்காக மணி, ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மணி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கார் மோதி பெண் பலி

தோகைமலை அருகே உள்ள குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வம் மனைவி சிலும்பாயி (வயது 50). இவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சிலும்பாயியை, அவரது மருமகன் பரமசிவம் தனது மோட்டார் பைக்கில் அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு 2 பேரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கெட்டிசனம்பட்டி பிரிவு ரோடு அருகே பைக் திரும்பியபோது, அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த பரமசிவத்தை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சிலும்பாயியை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலும்பாயி உயிரிழந்தார். இதையடுத்து தோகைமலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், கடலூர் மாவட்டம் புவனகிரி சேத்தியாதோப்பு மின்நகரை சேர்ந்த முகமது (29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுபானம் விற்ற 9 பேர் கைது

கரூர், நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நங்கவரம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் பழையூர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 55), பொய்யாமணி நடைப்பாலம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (52) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம், பணிக்கம்பட்டி சந்தை, நடுப்பட்டி பாலம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (62), சீகம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (51), பணிக்கம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல், தோகைமலை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அ.உடையாபட்டியை சேர்ந்த சின்னத்துரை (வயது 47), சுக்காம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (40), ரமேஷ் (35) ஆகியோர் அவரவர் பெட்டிக்கடைகளிலும், கல்லடையை சேர்ந்த முத்துசாமி (64) தனது வீட்டின் அருகேயும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண் மாயம்

கரூர் தோகைமலை அருகே உள்ள நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியின் மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பிரியதர்ஷினியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கரூர் வெள்ளியணை அருகே உள்ள பொம்மணத்துப்பட்டியை சேர்ந்தவர் தம்மாநாயக்கர் (வயது 66). விவசாயி. இவருக்கு, கடந்த பல நாட்களாக சர்க்கரை வியாதியுடன் பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. மேலும் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் அதிக வலியை கொடுத்துள்ளது. இதற்காக பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த தம்மாநாயக்கர் நேற்று காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தம்மாநாயக்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

கரூர் அருகே உள்ள வீரராக்கியம், சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32), தொழிற்பேட்டை அசோக் கம்பெனி வீதியை சேர்ந்தவர் மதன் (32), வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர்கள் 3 பேரும் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சிறுமியின் பாலியல் வழக்கு தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்பி சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, திருச்சி சிறையில் உள்ள சதீஷ், மதன், சுரேஷ் ஆகியோரிடம் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர். இதையடுத்து 3 பேர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

கரூர் வாங்கல் முனியப்பனூரை சேர்ந்தவர் ராஜூ மகன் பிரவீன் (24). இவர் அரசு தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்து வந்ததாக தெரிகிறது. பிரவீன் வெகுநேரமாக தனது செல்போனில் பேசி கொண்டிருந்ததால், அவரை ராஜூ கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவீன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் அங்கு வந்து, பிரவீனின் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story