கரூர் மாவட்டம்; ரூ. 6.48 கோடி செலவில், பாசன ஆதாரங்களை தூர்வாரும் பணி ‘விறுவிறு’
Karur News,Karur News Today- கரூர் மாவட்டத்தில், பாசன ஆதாரங்களை தூர்வாரும் பணி, வேகமாக நடந்து வருகிறது.
Karur News,Karur News Today- காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆதாரங்களை தூர்வாரிட திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 11 மாவட்டங்களில், ரூ 80 கோடிக்கு 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வளத்துறை சார்பில், 636 தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக, கரூர் மாவட்டத்தில் 648 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆற்று பாதுகாப்பு கூட்டம் மூலம் 18 பணிகள் 116 கிலோமீட்டர் தூரத்திற்கும் 48 லட்சம் மதிப்பீட்டில் அறியாறு வடிநில கோட்டம் மூலமாக 20 பணிகள் 37 கிலோமீட்டர் தூரத்திற்கும் 240 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த பணிகள் செயல்படுத்துவதன் மூலமாக மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது முதன்மை வாய்க்கால்களுக்கு சென்றடையும்.
மேலும் புகலூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், மூலம் கரூர் மாவட்டத்தின் மொத்த 16,720 ஏக்கர் விளைநிலங்களுக்கும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மாவட்டங்களில் மொத்தம் 2062 ஏக்கர் விலை நிலங்களுக்கு கடைமடை வரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஏரிகளுக்கு நீர் ஆதாரங்கள் வழங்கும் வாய்க்கால்கள் தூர் வாருவதன் மூலமாக மழைக்காலங்களில் வரும் மழைநீர் வீணாகாமல் ஏரிகளுக்கு சென்றடையும். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குஞ்சை தோட்டக்கரசி பகுதியில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நீர்வளத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்துள்ளார்.
தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஏற்பாடு
மேலும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் இந்த மாதம் 30 ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டும் இன்றி தினம் தோறும் மேற்கொள்ளப்படும் பணிகள் பதிவிடப்படுதல், துல்லியமாக கணக்கிடப்படுதல், உழவர் குழுக்கள் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு இந்த திட்டத்தின் முழுவதுமாக கண்காணிக்க உள்ளனர் எனவும் கலெக்டர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu