கரூரில் திடீர் மழை பொதுமக்கள் உற்சாகம்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையால் மக்கள் குடைபிடித்தபடி சென்றனர். கார்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்றனர். மழைநீரில் கார்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பகல் வேளை மட்டுமல்லாது இரவிலும் அந்த வெயிலின் தாக்கம் நீடிப்பதால் குழந்தைகள் வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இன்று மாலை திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. கரூர் நகரம், பசுபதி பாளையம், காந்திகிராம்ம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture