/* */

கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சிக்கல்: மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

Karur news - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சிக்கல்: மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்
X

திருமாநிலையூரில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையம்.

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிமுக மற்றும் திமுக கட்சியினரிடையே கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கட்டாயம் புதிய பேருந்து நிலையம் அமையும் என மக்கள் எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்தனர்.

கரூர் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியால் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் உருவாக்கப்படும் எனவும் அந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி பூமி பூஜை பணிகளும் நடைபெற்று இன்றுவரை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் கிராமத்தில் பாசன வாய்க்கால் மற்றும் விலை நிலங்களை தடுத்து கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருகிறது. அதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் ராஜ் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா நாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் மாநில அரசிடம் அனுமதி பெறாமல் நீர் வழித்தடங்கள் மற்றும் விளை நிலங்களை சீரமைத்து கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் கட்டி வருவது கூட்டுக்குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உரிய அனுமதியின்றி விளை நிலங்களில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஏற்படும் சேதங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட வேண்டும். மாநில அரசிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்பது தெரிந்தும் ஒப்புதல் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை 2 மாதங்களுக்குள் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் அபராத தொகையை பசுமை பரப்பை அதிகப்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும். அரசியலிலிருந்து தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை பஸ் நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோடங்கிபட்டியிலும், தற்போதைய திமுக ஆட்சியில் திருமாநிலையூரிலும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு தற்போது மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திற்க இதுபோன்ற சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஏன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களது பணியை மெத்தனமாக செயல்படுகிறார்கள் என சில சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 25 March 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்