கரூர் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி 10 மாதத்தில் நிறைவடையும்

கரூர் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி 10 மாதத்தில் நிறைவடையும்
X

கரூர் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

Karur New Bus Stand-கரூர் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி 10 மாதத்தில் நிறைவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Karur New Bus Stand-தமிழகத்தில் கரூர் மாவட்டம் தொழில் வளம் மிகுந்த ஒரு மாவட்டமாகும். திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிந்த இந்த மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை தயாரிப்பு, பஸ்பாடி கட்டுதல் ஆகியவை முக்கியமான தொழில்களாக உள்ளன. விவசாயத்தை பொறுத்தவரை முருங்கை காய் மற்றும் வெற்றிலை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கரூரில் தற்போது இயங்கி வரும் முத்துக்குமார சாமி பேருந்து நிலையம் கடந்த 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக உள்ள இந்த பஸ் நிலையத்தை மாற்ற வேண்டும்என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை. பழைய பஸ் நிலையத்தில் இடம் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போது முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் உத்தரவிட்டு கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டினார். திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாநகராட்சி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகளை மின்சாரம் மதுவிலக்கு ஆயத் தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு இடங்களில் நேற்று துவக்கி வைத்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 10 மாதங்களுக்குள் நிறைவடையும். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் இந்த பேருந்து நிலையத்திற்கு சூட்டப்பட உள்ளது. புதிய பேருந்து நிலையமானது புறநகர் பேருந்து நிலையமாகவும், கரூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக செயல்படும் என்றார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், எம். எல். ஏ.க்கள் மொஞ்சனூர் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
why is ai important to the future