/* */

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் வழங்கும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் வழங்கும் விழா
X

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விழா.(மாதிரி படம்)

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.


முன்னதாக மாரியம்மன் மூப்பன் வகையறாவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் கனவில் மூன்று நாட்களுக்கு முன்பு அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முக்குலை கம்பம் பாலம்மாள்புரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு பாலம்மாள் புரத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கம்பத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று பின்னர் கம்பம் ஊர்வலம் தொடங்கியது. வேலம்மாள் புரத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது ஐந்து ரோடு வழியாக ஜவகர் பஜார் அடைந்து பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது கோவிலில் அறங்காவலர் முத்துக்குமாரிடம் முக்கலை கம்பம் மூக்கன் வகையறாக்களால் ஒப்படைக்கப்பட்டது.


பின்னர் கோவிலில் கம்பம் செதுக்கப்பட்டு பின்னர் மாலையில் அமராவதி ஆற்றில் சிறப்பு ஆராதனை நடைபெற்று தொடர்ந்து கம்பம் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு கோவில் முன்பாக நடப்பட்டது. கோவில் முன்பாக கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் விழா நடக்கிறது. இன்று நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On: 14 May 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!