கரூர்; வெற்றிலை விலை ‘கிடுகிடு’ என உயர்வு
Karur News,Karur News Today- கரூரில் வெற்றிலை விலை உயர்வு (கோப்பு படம்)
Karur News,Karur News Today- கரூர் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து, 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்து ரூ.500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.
தற்போது ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ. 3ஆயிரத்து 200-க்கும் ஏலம் போனது. வரத்து குறைந்தும், முகூர்த்தங்கள் அதிக அளவில் இல்லாதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெற்றிலை பழக்கம் என்பது, நாளுக்கு வெகுவாக குறைந்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஒரு தரப்பினர் மட்டுமே, இன்னும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் மட்டுமே, அதிகமாக வெற்றிலை, பாக்கு போடுகின்றனர். இந்த தலைமுறையில், குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்களில், ஐந்து சதவீதம் பேர் கூட வெற்றிலை போடும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர். திருமணம், கிடா விருந்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மட்டுமே சிலர், வெற்றிலை பாக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மற்றபடி, மக்கள் மத்தியில் வெற்றிலை பயன்பாடு என்பது பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லை. நகர மக்கள் மத்தியில் அந்த பழக்கமே வெகுவாக குறைந்துவிட்டதாக, வெற்றிலை வியாபாரிகள் சிலர், கவலையாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu