கரூர்: ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்

கரூர்: ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்
X

பைல் படம்.

வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.

கரூர் அருகே பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 21-ம் தேதி வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, பயிற்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வளர்ப்பு பயிற்சி முகாமில், ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள், பயிற்சி முகாம் நடக்கும் 21ம் தேதி காலை, 10:30 மணிக்குள் பயிற்சி மையத்துக்கு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story