கரூர் மாவட்ட செய்திகள்
Karur News , Karur News Today- கரூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் காவல்துறையில் புகார்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி கல்பனா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசிக்கும் தந்தை காமராஜ் வீட்டிற்கு கல்பனா வந்தார். வீட்டில் இருந்த கல்பனா மற்றும் குழந்தைகள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த காமராஜ், பாலவிடுதி காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான கல்பனாவை தேடிவருகின்றனர்.
மனைவி மாயம்: கணவன் புகார்
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஆத்துார் நொச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 19). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் ஷர்மிளா கிடைக்காததால், கணவர் சங்கீத்குமார் வாங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான ஷர்மிளாவை தேடி வருகின்றனர்.
மாயனூர் கதவணையில் நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சின்னசேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முகேஷ் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், மாயனுார் காவிரி கதவணை அருகில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முகேஷின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பெரம்பலுார் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 36). தொழிலாளியான இவர், கரூர் மாயனுார் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இவரை அப்பகுதியினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பொன்ராஜ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu