கரூர்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்.

கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் ஆலோசனைக்கு கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் கரூர் மாநகராட்சிக் குட்பட்ட 12, 17, 19, 31, 32, 33, 34, 35, 36 ஆகிய வார்டு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சின்னசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் மல்லிகா சுப்பராயன், கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பசுவை சிவசாமி, மாநகர் மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் சம்பத்குமார், பொருளாளர் சிங்கார வெங்கட்ராமன், இணைச்செயலாளர் விமலா, துணை செயலாளர் பாமா, துணை செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story