கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை
X
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக, இன்று(ஜூலை 11) கரூரில் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் சோதனை நீடித்தது.

இந்த நிலையில், கரூரில் 3 வது கட்டமாக மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் தொடர்புடைய 5 இடங்களில் 3ம் கட்டமாக வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்

ஏற்கனவே கடந்த மே 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட சோதனையில் சீல் வைக்கப்பட்டு இருந்த சில இடங்களில் சீலை அகற்றி அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி இருந்தனர். கரூரில் அமைச்சர் சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டதால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக இன்று கரூரில் வருமான வரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனையை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?