தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம்

தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம்
X

கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் - கோப்புப்படம்

கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது குறித்து கால்நடைத்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

இதன் ஒரு பகுதியாக தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள. இதன் ஒரு பகுதியாக தோகைமலையில் கால்நடைகளுக்கான தோல்கட்டி நோய் குறித்து வீடு வீடாக சென்று செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தோல்கட்டி நோயினால் ஏற்படும் பாதிப்புகள், அதன் அறிகுறிகள், தோல்கட்டி நோய் பரவுவதற்கான காரணங்கள், தோல்கட்டி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம் மூலம் குணமாக்கும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்து கூறப்பட்டது.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில் தற்போது கால்நடைகளுக்கு தீவிரமாக பரவி வரும் தோல்கட்டி நோய் என்பது கேப்ரிபாக்ஸ் என்ற வைரசால் பரவி வருகிறது. இதனால் சினைமாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மழைக் காலங்களில் ஈக்களின் வாயிலாக மிக வேகமாக பரவும் இந்நோயால், கால்நடைகள் தீவனம் உண்ணாமை, கண் மூக்கில் இருந்து சளி போன்று தென்படுதல், காய்ச்சல், பால் கறப்பதில் குறைபாடு, உடம்பு முழுவதும் கட்டிகள் தோன்றுதல், கால் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, இந்த நோய் தாக்கிய கால்நடைகளுக்கு குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை, நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக ஆறவிட்டு பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். இதன் மூலம் தோல்கட்டி நோய் குணமாகும் என்று கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!