கரூர் அருகே வீடு இடிந்து விழுந்து விபத்து: மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு

கரூர் அருகே வீடு இடிந்து விழுந்து விபத்து: மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு
X

இடிந்து விழுந்துள்ள வீடு.

Karur News today - கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Karur News today - கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). இவரது மனைவி லட்சுமி (வயது 70). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கந்தசாமி இன்று காலையிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவரது மனைவி லட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். சுமார் காலை 6.30 மணியளவில் அவர் சமையலறையில் காபி போடச் சென்றபோது திடீரென்று வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்போது இடிபாடுகளுக்குள் லட்சுமி சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சுவர் இடிந்து விழுந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் இணைந்து லட்சுமியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். 50 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் திடீரென மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மது விற்பனை செய்த 11 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை, மாயனுார், தோகைமலை, லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த பிச்சைமுத்து (வயது 66), தங்கம்மாள் (59), ரவி (23), சிவக்குமார், (28), முத்துசாமி (52), சின்னபொண்ணு, (35), தனம் (53), பிரியா (40), கலைச்செல்வன் (29), மற்றொரு தனம், (55), மற்றொரு சின்னபொன்ணு (48) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!