தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு; விண்ணப்பிக்க அழைப்பு
Karur News,Karur News Today- தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்கலாம். (கோப்பு படம்)
Karur News,Karur News Today- இதுகுறித்து, கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தாட்கோ சார்பில், பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்சி., (கம்ப்யூட்டிங் டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் இன்டிகிரேட் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படித்திடவும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.
இதற்கான தகுதிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 2022-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறமைக்கேற்றவாறு பதவி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இந்த படிப்பிற்கான முழு செலவும் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம்.
மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu