கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

கரூரில் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடைபெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புகார் அளித்ததின் பேரில் கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், திமுக ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர்ஆனந்த் கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் 3 கோடி ரூபாய் அளவில் சாலை போடாமலே சாலை போட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை எடுத்துள்ளனர்.
இந்த ஊழல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் ஊழல் புகார் குறித்து புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை வருவதை முன்னிட்டு.நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் உத்தரவின் பேரில்,கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu