கரூரில் மழை காரணமாக சாய்ந்த மின்கம்பங்கள்

கரூரில் மழை காரணமாக சாய்ந்த மின்கம்பங்கள்
X

பலத்த காற்றுடன் கூடிய மழையால் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம் 

கரூர் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 50 மின்கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்கள் இருளில் மூழ்கின

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது.

அதில் புலியூரை அடுத்த உப்பிடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னாக் கவுண்டனூர், லிங்கத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இந்த திடீர் காற்றின் காரணமாக புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. சின்னாக் கவுண்டனூர் கிராமத்தில் பல வீடுகளின் மீது மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் 8-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தது. ஓடுகள், உடைந்து சேதமடைந்தது.


வீட்டின் முன்பக்கம் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் மீது மரங்களும் சாய்ந்துள்ளன. சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக அந்த கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலவிடுதி 30 மி.மீ மழை பதிவாகியது. மேலும் புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சின்ன கவுண்டனூர், கஞ்சமனூர், வேலாயுதம்பாளையம், பொரணி, சாலப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கும் 50க்கும் மேலான மின்கம்பங்கள் பெயர்ந்து விழுந்தது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த மின்சார வாரியம், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அவற்றை சீரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil