தாந்தோணி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கல்வி திட்ட விழிப்புணர்வு கூட்டம்

தாந்தோணி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கல்வி திட்ட விழிப்புணர்வு கூட்டம்
X

கல்வி திட்ட விழிப்புணர்வு கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவையும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின

கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டாரத்தில் உள்ள ஆர்.1561 தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், கோடங்கிபட்டியில் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கல்வி திட்ட கூட்டமும், நிதி சார் மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது. கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவையும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

கரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வசந்தகுமார் கூட்டத்தில் பேசும்போது, சங்க உறுப்பினர்கள் எத்தனை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளோம் என்பது முக்கியமில்லை. ஒரு வங்கி அல்லது ஒரு சங்கத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் போதுமானது. அந்த கணக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும். குடும்பத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி கடன் பெற்று பயன் அடையலாம் என்று கூறினார்.

கரூர் மாவட்ட நபார்டு வங்கியின் கோட்ட மேலாளர் மோகன் கார்த்திக் பேசும்போது, சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது, ஒரு வங்கியிலோ அல்லது ஒரு சங்கத்திலோ கடன் பெற்ற பிறகு வேறு ஊரிலோ, பக்கத்தில் உள்ள வங்கியிலோ, முன்னர் பெற்ற கடனை கட்டி முடிக்காமல் புதிய கடன்கள் பெற முடியாது. பயிர்க்கடன், சுய உதவிக்குழு கடன் எதுவானாலும் முழுவதும் திருப்பி செலுத்தி விட்டு புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் கதிர்வேல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கரூர் சரக மேற்பார்வையாளர் ரமேஷ் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுயஉதவி குழு ஆரம்பித்து சங்கத்தில் கடன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சங்க செயலாள வளர் மதி, கரூர் மாவட்ட கூட்டு றவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, சங்க பணியாளர் குணசேகரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil