கரூரில் சிறு கைத்தறி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை

கரூரில் சிறு கைத்தறி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை
X

கரூரில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கரூரில் சிறு கைத்தறி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைப்பது தொடர்பாக கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்விற்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கைத்தறி துறை ஆணையர் விரிவாக விளக்கினார். பிரேரணைகள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைப்பதன் வாயிலாக கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியை அதிகப்படுத்துவது மற்றும் நவீனப்படுத்துவது தொடர்பாக தொழில்முனைவோரின் கருத்துரைகள் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து. தாளப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவினை கைத்தறி துறை ஆணையர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டத்தில் கைத்தறி துறை உதவி இயக்குநர் சரவணக்குமார். கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் .எம்.நாச்சிமுத்து செயலாளர் சுகுமார், கைத்தறி துணி ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் அன்பொளிகாளியப்பன், கரூர் வீவிங் & நிட்டிங் அசோசியேஷன் தலைவர் தனபதி கலந்து கொண்டனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்