கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை
X

சேவல் சண்டை நடைபெற்ற இடத்தில் பொருட்களை பறிமுதல் செய்யும் போலீசார் 

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய கும்பலில் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பேருந்து டெப்போ அருகே திமுக நிர்வாகிகளான கோல்டு ஸ்பாட் ராஜா, தம்பி சுதாகர் ஆகியோருக்கு சொந்தமான பிளக்ஸ் வேஸ்ட் கழிவுகள் கொட்டுவதற்காக குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த குடோன் அருகில் இன்று அனுமதியின்றி சேவல்கட்டு நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்த ராமானுஜம் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து ஒரு இறந்த சேவல் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகள் மற்றும் 10 இருசக்கர வாகனத்தை பசுபதிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future of education