கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி ஏலம்

கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி ஏலம்
X
கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் வருகிற 24ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற ௨௪ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட (Condemn) காவல் வாகனங்களின் பொது ஏலமானது வருகின்ற 24.06.2024 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். ஏலத்திற்கான காவல் வாகனங்கள் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் 20.06.2024 அன்று காலை 07.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ள நபர்கள் 22.06.2024 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை இரு சக்கர காவல் வாகனங்களுக்கு ரூ.1000/-ம் நான்கு சக்கர காவல் வாகனங்களுக்கு ரூ.2000/-ம் முன் வைப்புத்தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் GST விற்பனை வரியும் சேர்ந்து 24.06.2024 அன்று உடனே செலுத்திட வேண்டும் என்பதனையும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி ஏலம் தொடர்பாக தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்: காவல் வாகன பிரிவு தலைமை காவலர்கள் பார்த்திபன் (96986843462) செந்தில்குமார் (9498161215).

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!