/* */

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்

புதிதாக அமைத்த போர்வெல் குழாயில் இருந்து தண்ணீர் பொங்கி வெளியேறுவதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்

HIGHLIGHTS

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்
X

புதிய போர்வெல் குழாயில் பொங்கி வரும் நீரை ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்

கரூர் அருகே விவசாயத்திற்காக போடப்பட்ட போர்வெல் குழாயில் இருந்து தண்ணீர் பொங்கி வழிவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் மலைக்கோவிலூர் அருகேயுள்ள கொக்காட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தனது தோட்டத்தில் விவசாய பணிக்காக ஆழ்குழாய் கிணறு ஒன்றை இன்று தோண்டினார். நவீன ரக போல்வெல் இயந்திரம் மூலம் கிட்டத்தட்ட 900 அடி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் பீச்சி அடித்தது. இதையடுத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை நிறுத்தினர். பணிகளை நிறுத்திய பிறகும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி பிரவாகமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி வெளிவந்து கொண்டிருப்பதை அந்த பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 5:18 PM GMT

Related News