அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகள் வாந்தி தலைசுற்றல், வயிற்றுவலி – கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரூரில் அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகள் வாந்தி தலைசுற்றல், வயிற்றுவலி – கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா மூன்றாம் அலை தீவிரம் குறைந்து ஆங்காங்கே பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கரூர் அருகே ஒரு அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி தமிழக அளவில் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கருமணம்பட்டி ஊராட்சியில் உள்ள, பண்ணப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், எப்போதும் போல், மாணவிகளுக்கு மதிய உணவு சத்துணவு மையத்தில் பரிமாறி உள்ளனர். 22 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், சனிக்கிழமை 18 குழந்தைகள் மட்டும் தான் வந்துள்ளனர். இந்த 18 குழந்தைகளுக்கு மதிய உணவானது சத்துணவு மையத்தில் பரிமாறப்பட்டுள்ளது, இந்த மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுவலி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி, பரவியதால் அக்கம் பக்கத்தினருக்கு பரவ, குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த பள்ளியின் முன்பு திரண்டனர். இந்நிலையில் முதலுதவிக்காக, அதே பகுதியில் ஈசநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அப்பள்ளிக்கு விரைந்து வந்து முதலுதவி அளித்த நிலையில், முழு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும், இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu