தமிழக வளர்ச்சியா ,உதயநிதி வளர்ச்சியா ? அமித்ஷா கேள்வி

தமிழக வளர்ச்சியா ,உதயநிதி வளர்ச்சியா ? அமித்ஷா கேள்வி
X

தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா அல்லது உதயநிதிஸ்டாலின் வளர்ச்சி வேண்டுமா என அரவக்குறிச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார். வேலாயுதம்பாளையம் கடைவீதியில் அமித்ஷா பேசுகையில், அண்ணாமலையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.தமிழகத்தின் வளர்ச்சியை பாஜக அதிமுக கூட்டணியை தவிர வேறு யாராலும் தர முடியாது. தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா. மக்களே சொல்லுங்கள். தமிழக வளர்ச்சிக்கு பாஜகவிற்கு வாக்களியுங்கள் என அமித்ஷா பேசினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா