போதையில் விழுந்தவரை தூக்கிவிட வந்தவருக்கு அடி உதை: இருவர் கைது

போதையில் விழுந்தவரை தூக்கிவிட வந்தவருக்கு அடி உதை: இருவர் கைது
X

பைல் படம்.

சோமூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவருக்கு உதவிய நபர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது.

சோமூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (23). இவரது நண்பர் அதே ஊர் குடித்தெருவை சேர்ந்தவர் ரவி (24). எலக்ட்ரிஷியன்களான இருவரும் இரவு குடி போதையில் மொபட்டில் ஒன்றாக சென்றுள்ளனர். இருவரும் சோமூர் பகவதியம்மன் கோயில் அருகே சென்றபோது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதைகண்டு அங்கிருந்த முருகேசன் என்பவர் இருவரையும் தூக்கிவிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், அரவிந்தன் மற்றும் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!