/* */

லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

தென்னிலை அருகே லாரியும் காரும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
X

லாரியும்,  காரும் மோதிக் கொண்டதில் உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (38 ). அவரது மனைவி ரேவதி ( 31). கோவை மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியா( 29). இவர்கள் கார்த்தியின் சித்தப்பாவின் இறப்புக்கு கரூருக்கு வந்துவிட்டு பிறகு கார்த்தி வேலை பார்க்கும் ஊத்துக்குளி பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார், கரூர் கோவை சாலையில் தென்னிலை அருகே வானவிழி என்ற இடத்தில் சென்றபோது காரும், எதிரே வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ரேவதியும், இலக்கியாவும் காயமுற்றனர். இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கே.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்