திமுக மத்திய ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசு என்று கூறியதா?: பா.ஜ.க.துணைத்தலைவர் கேள்வி

திமுக மத்திய ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசு  என்று கூறியதா?: பா.ஜ.க.துணைத்தலைவர் கேள்வி

கரூரில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி ஆகியவற்றை பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.




''ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுக மத்திய அரசில் பங்கெடுத்த போது சொல்லவில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது சொல்லவில்லை,'' என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

''ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுக மத்திய அரசில் பங்கெடுத்த போது சொல்லவில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது சொல்லவில்லை,'' என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

பாஜக சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்டவைகள் வழங்கு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கரூர் வெங்கமேடு பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசி, காய்கறி உள்ளிட்டவைகளை பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஒன்றிய அரசு என்ற வார்த்தை மூலம் திமுக என்ன சொல்ல வருகிறார்கள் என கூற வேண்டும் . மத்திய அரசில் திமுக பங்கெடுத்த போது, இந்த வார்த்தையை சொல்லவில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது. சொல்லவில்லை. தமிழ்நாட்டில் 2006 - 11ல் அதிகமாக மின்வெட்டு இருந்த்து. 2011 க்குப்பிறகு மின் உபரியாக இருந்த மாநிலம் இப்போது மின் தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது?

இந்தியா உருவானதிலிருந்து அணில் உள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன் அணிலால் பவர் கட் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. மின்தடையால் மக்கள், தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் பூர்வமாக மின் தடைக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும். ஜெய்ஹிந்த் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சியாக மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சி திமுகவின் பி டீம். காங்கிரஸ் கட்சி நேற்றில் இருந்து டிவிட்டரில் ஜெய்ஹிந்த் என பதிவிடுகிறார்கள்.

பெட்ரோல் மூலம் மாநில அரசுக்கு 30 ரூபாய்க்கு மேல் வரி வருகிறது. பல மாநில அரசுகள் 10 வரை குறைத்துள்ளன. நீட் தேர்வு இல்லை என அரசியலுக்காக சொல்கிறார்கள். திமுக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். பெட்ரோலை ஜிஎஸ்டிக்க்குள் கொண்டு வந்தால் ஏற்படும் பொருளாதார இழப்பை மத்திய மாநில அரசுகளால் ஈடுகட்ட முடியாது. மாநில அரசு இதை அரசியலாக்க கூடாது. உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. அதிக அளவில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story