வீட்டில் சாராயம் தயாரித்த நபர் கைது

வீட்டில் சாராயம் தயாரித்த நபர் கைது
கரூரில் வீட்டிலேயே சாராயம் தயாரிக்க 300 லிட்டர் ஊறல் போட்டு வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்து, ஊறலை கொட்டி அழித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் 2 ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மொஞ்சனூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்னிலை காவல் நிலைய ஆய்வாளர் ரமாதேவி மற்றும் போலீஸார் மொஞ்சனூரில் உள்ள தொட்டம்பட்டி என்ற இடத்தில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டுக்குள் செந்தில்குமார் சாரயம் காய்ச்சுவதற்காக 300 லிட்டர் சாரய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான பொருள்களை வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆய்வாளர் ரமாதேவி செந்தில்குமாரை கைது செய்தார். மேலும், போலீசார் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

Next Story