மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை பார்வையிடுகிறார் ஆட்சியர் பிரபுசங்கர்
கரூர் மாவட்டம், நன்னியூர் ஊராட்சியில் தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் அப்போலோ மருத்துவமனை மூலம் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று தொடக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் ரூ. 1 கோடியே 27 லட்சத்து 500 தொகையை வழங்கியுள்ளனர். இந்த நிதி மூலம் 25 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றார் ஆட்சியர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu