கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்து

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ  விபத்து
X

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புகளூர் வட்டம், புகளூர் பகுதியில் ஈ.ஐ.டி பாரி நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் குடோனில் ஒரு பகுதியாக அகர்பத்தியின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

இந்த அகர்பத்திக்காக பவுடர் தயாரிக்கும் பொருட்கள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த தீயானது, சுமார் 30 நிமிடம் எரிந்த நிலையில், இந்த தகவல் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கும், தமிழ்நாடு காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு துறைக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தீயணைப்பு வாகனங்களும் மொத்தமாக இணைந்து கூட்டுமுயற்சியால் தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி பெருமளவில் தீ சேதத்தினை பெருமளவில் தவிர்த்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில், உயிர்சேதம் ஏதும் இல்லை என்றும், தீயினால் முற்றிலும் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் வரும் என்றும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயந்திரத்தில் இயங்கும் கன்வையர் பெல்ட் என்ற பெல்ட்டில் உள்ள ஐ டீலரில் ஏற்பட்ட திடீர் தீயால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!